திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் ராஜேஷ் தேர்வு

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், இடதுசாரிகள் கூட்டணி 4 மாநகராட்சியையும், காங்கிரஸ் கூட்டணி 1 மாநகராட்சியையும், பாஜக கூட்டணி 1 மாநகராட்சியையும் கைப்பற்றியது.
இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க இன்று காலை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 101 வார்டு உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியில் 51 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதன்படி, மேயர் தேர்தலில் பாஜகவின் விவி ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார். அவர் சுயேட்சை உறுப்பினர் உள்பட 51 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடது சாரிகளின் வேட்பாளர் 29 வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 19 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக பாஜக கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.






