பள்ளிகளில் மாணவ, மாணவியர் தினமும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்; உ.பி. அரசு அதிரடி

இந்தி, ஆங்கிலம் செய்தித்தாள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தினமும் மாணவ, மாணவியர் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாணவ, மாணவியர் தினமும் காலை பிரார்த்தனை நிறைவடைந்த உடன் 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம் செய்தித்தாள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும். மாணவ, மாணவியர் இந்தியா, உலகம், விளையாட்டு போன்ற செய்திகளை வாசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் வாசிப்பு மூலம் மாணவ, மாணவியரின் பொது அறிவு அதிகரிப்பதுடன், வாசிப்பு திறனும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்தித்தாள்கள் தினமும் பள்ளி நூலகத்தில் வழங்கப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related Tags :
Next Story






