14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப உறவினர் - அதிர்ச்சி சம்பவம்

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த 14 வயது சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால், யாருமின்றி தவித்து வந்த சிறுமி அவரது உறவினரான மாமா (வயது 35) வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், குடும்ப உறவினரான மாமாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அண்டை வீட்டை சேர்ந்த பெண் , சிறுமியை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






