மராட்டியம்: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது - 2 பெண்கள் மீட்பு


மராட்டியம்: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது - 2 பெண்கள் மீட்பு
x

தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் நவி மும்பையில் வாஷி பகுதியில் உள்ள ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த ஓட்டலில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஓட்டல் மேலாளர், ஓட்டல் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை மீட்டனர். அதேவேளை, தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story