2025-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்


2025-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்
x

இந்தியாவில் 2026-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.

இட்டாநகர்,

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் இந்தியாவில் 2026-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, இந்தநிலையில்,

இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம் ஆகும். அஞ்சோவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்கிற கிராமத்தில் முதன் முதலில் சூரியன் உதயமாகிறது. இந்த கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்து விடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும். கடல் மட்டத்திலிருந்து 1,200மீ உயரத்தில் சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்தநிலையில், 2025ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தைக் காணக் கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள் இந்தியாவில், அருணாச்சல பிரதேசத்தில் முதலில் சூரியன் மறைந்தது.

1 More update

Next Story