ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமை.. டென்னிஸ் வீராங்கனை தந்தையால் சுட்டுக்கொலை

ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
குருகிராம்,
அரியானா மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (வயது 25). இவர் தனது குடும்பத்துடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவரது தந்தை கண்டித்தும் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இது அவரது தந்தையை வருத்தமடைய செய்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று ராதிகா யாதவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 5 முறை துப்பாக்கியால் சுட்டதில் 3 குண்டுகள் ராதிகா மீது பாய்ந்துள்ளது.
இதனையடுத்து ராதிகா யாதவ் ஆபத்தான நிலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று ராதிகாவின் தந்தையைக் கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.