திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு- மனுவில் கூறியிருப்பது என்ன?


திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு- மனுவில் கூறியிருப்பது என்ன?
x
தினத்தந்தி 4 Dec 2025 9:29 PM IST (Updated: 4 Dec 2025 9:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்துக்கு பதில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற கேட்பதால் பிரச்சினை புதிதாக தீபம் ஏற்ற சொல்லும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 மீட்டரில்தான் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வாய்ப்புள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை இன்று மாலை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும், “இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றி நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டினர். ஆனால், மேல்முறையீடு செய்யவுள்ளதால் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என காவல் துறை தெரிவித்தது. இதனால் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை;100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளது; அதன்படியே அரசு செயல்படுகிறது. புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிப்பது இல்லை ஐகோர்ட் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது” என்று மனுவில் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story