கடும் வெப்பம்: கர்நாடகாவில் அரசு அலுவலக நேரம் மாற்றம்

கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுடன் சேர்த்து வெப்ப அலையும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடும் வெப்பம் மற்றும் வெப்ப காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,
விஜயபுரா, பாகல்கோட், பெல்லாரி, பீதர், கலபுராகி, கொப்பல், ராய்ச்சூர், யாதகிரி, விஜயநகர் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இருந்த அலுவலகப்பணி நேரம் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத நிலையில், 9 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.