மணிக்கு 180 கி.மீ., வேகம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி


மணிக்கு 180 கி.மீ., வேகம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
x

சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்

புதுடெல்லி

நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஏ.சி. வசதி, பயோ டாய்லெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது இந்த ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது.

இதனைத் தொடர்ந்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. நீண்ட தூர இரவு நேரப் பயணத்திற்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.இந்த ரெயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்கிறது. ரெயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர், ஆடாமல் அசையாமல் இருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை செய்யப்பட்டது. இது கோட்டா–நாக்டா பிரிவுக்கு இடையில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரெயில் சென்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்டது. டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஆடாமல், அசையாமல் இருந்தது ரெயிலின் புதிய தொழில்நுட்ப அம்சங்களை நிரூபித்தது” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

1 More update

Next Story