தென் ஆப்பிரிக்க ஜி-20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் - பிரதமர் மோடி பெருமிதம்

ஜி-20 மாநாட்டில் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்தினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திரமோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு 3 நாள் பயணமாக சென்று இருந்தார். அங்கு நடை பெற்ற ஜி-20 உச்சி மாநாட் டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் இந்தியா - பிரேசில் - தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோ சிறில் சாவை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, இயற்கை செயற்கை நுண்ணறிவு - தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மேக்ரான், தென் கொரிய - அதிபர் லீஜே-மியுங், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா. இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் - தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்தினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:
வெற்றிகரமான ஜோகன் னஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா) ஜி-20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலக தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். ஜி-20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






