ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - துணை ஜனாதிபதி பங்கேற்பு

சத்திய சாய் பாபாவின் பாதையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், ஆன்மிக இசைக் கச்சேரிகள், சத்திய சாய் பாபாவின் வாழ்க்கை மற்றும் தொண்டுகளை எடுத்துரைக்கும் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அவரை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வரவேற்றார். பின்னர் இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திய சாய் பாபா தனது வாழ்க்கை மற்றும் போதனைகள் மூலம் லட்சக்கணக்கான மக்களை ஊக்குவித்துள்ளார் என்றும் இளைஞர்கள் அவரது பாதையை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.






