ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு


ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Nov 2025 12:58 PM IST (Updated: 22 Nov 2025 1:00 PM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் ஜனாதிபதியை, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று வரவேற்றார்.

அமராவதி,

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்திக்கு இன்று வருகை தந்தார். இன்று காலை 11 மணியளவில் புட்டபர்த்தி விமான நிலையத்திற்கு வந்த ஜனாதிபதியை, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆந்திர மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

1 More update

Next Story