மிசோரமில் ரூ.26 கோடி போதைப்பொருள் பறிமுதல்

கோப்புப்படம்
மியான்மர் நாட்டில் இருந்து மிசோரம் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
ஐஸ்வால்,
மிசோரம் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படையினர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து ஐஸ்வால் மாவட்டம் செலிங் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.26 கோடி மதிப்புள்ள 15 கிலோ எடையுள்ள 15 மெத்தம்பேட்டமைன் போதை மருந்து பொட்டலங்களும், 49 சோப்பு பெட்டிகளில் 707 கிராம் எடையுள்ள ஹெராயினும் வைத்து இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மியான்மர் நாட்டில் இருந்து மிசோரம் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்த மாநில அரசு போராடி வருகிறது.
Related Tags :
Next Story






