ராணுவத்துக்கு எதிரான கருத்துகள்: ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு தடை நீட்டிப்பு


ராணுவத்துக்கு எதிரான கருத்துகள்: ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு தடை நீட்டிப்பு
x

கோப்புப்படம்

ராகுல் காந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் போது இந்திய ராணுவத்தை விமர்சித்து பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோர்ட்டில் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் லக்னோ கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக ராகுல்காந்தி அலாகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவை அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

1 More update

Next Story