பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவிப்பு
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

8 மணி நேர பணி, 46 மணி நேரத்துடன் கூடிய வார விடுமுறை, 2 நாட்கள் மட்டும் தொடர் இரவுப்பணி, காலி பணியிடங்களை உடடினயாக நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரெயில் என்ஜின் டிரைவர்கள் நலச்சங்கம் 2 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சி.ஜேம்ஸ், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ரெயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி தொடங்கி அடுத்த 48 மணிநேரத்திற்கு (2 நாட்கள்) தேசிய அளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story