கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்

கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தின் நாடியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், தரையிறங்கும் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது. மாற்று பாதையில் பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேரணி நடைபெறும் தாஹேர்பூருக்கு சாலை மார்க்கமாகச் செல்வாரா அல்லது வானிலை சீரடையும் வரை காத்திருந்து, வான்வழி மார்க்கமாகவே செல்வாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story






