பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை


பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை
x

உக்ரைன் - ரஷியா போர் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

டெல்லி,

பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதேபோல், உக்ரைன் - ரஷியா போர் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ஏற்றுக்கொண்டார். அழைப்பை ஏற்று இந்தியா வரும் இம்மானுவேலுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் மோடி, இம்மானுவேல் மேக்ரான் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1 More update

Next Story