பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது; இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது - அமித்ஷா


பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது; இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது - அமித்ஷா
x

பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் இதுவரை 28-வது உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலியுடன் இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது. இந்த கவுரவ விருதை பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும். இந்த விருது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் உயர்ந்து வரும் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. பிரதமருக்கு அளிக்கப்பட்ட இந்த மரியாதை இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையிலான நட்புறவில் ஒரு மைல்கல்லாக நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story