பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு


பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு
x

ஐதராபாத்தில் விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

பெங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற தனி விமானம் ஒன்றின் விமானியாக பணிபுரிந்தவர், முன்னதாக அதில் பணியில் இருந்த 26 வயது பணிப்பெண் ஒருவரை பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த பணிப்பெண் பெங்களூரு பேகம்பேட் போலீசில் புகார் செய்தார்.

பின்னர் விமானம் ஐதராபாத் சென்றடைந்ததும், அங்கு முறைப்படி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், அங்குள்ள ஹலாசுரு போலீஸ் நிலையத்துக்கு வழக்கை மாற்றினர். அதன்படி பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story