தினமும் இரவில் பாலியல் தொல்லை....மனைவி,மாமியார் மீது புகார் அளித்த ரெயில் ஓட்டுநர்

மனைவிக்கு தெரியாமல் அறையில் ரகசிய கேமராவை பொருத்தினார் லோகேஷ்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30) இவருடைய மனைவி அதே பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 27). கடந்த 2023-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹர்ஷிதா ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால், தான் ஒரு ரெயில் ஓட்டுநர் என்பதையும் பொருட்படுத்தாமல் வரதட்சணை வாங்காமல் அவரை லோகேஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றது. அதன்பிறகு
ஹர்ஷிதா கணவரை துன்புறுத்த தொடங்கினார். லோகேஷின் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் நகை மற்றும் பணத்தை கேட்டு அவரை சித்தரவதை செய்யத்தொடங்கினர். அவர்கள் அவரை தினமும் இரவில் உடல் ரீதியாகாவும் (பாலியல் தொல்லை) படாதபாடு படுத்தி வந்துள்ளனர். அவர்களின் சித்தரவதை நாளுக்குநாள் அதிகரித்தன. இதனால் லோகேஷ் ஒரு திட்டத்தை வகுத்தார். அவர்களுக்கு தெரியாமல் அறையில் ஒரு ரகசிய கேமராவை பொருத்தினார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் லோகேஷை உட்கார வைத்து 2 கன்னங்களிலும் பளார்...பளார் என்று அறைந்தார். அடிகளை தாங்க முடியாமல் லோகேஷ் கைகளை உயர்த்தி கும்பிட்டு தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனாலும் ஹர்ஷிதா கணவர் என்று கூட பார்க்காமல் கருணை காட்டவில்லை.
லோகேஷ் மீது அமர்ந்து முகத்தில் பலமாக உதைத்தாள். இந்தகாட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகின. தனக்கு தினந்தோறும் மனைவி, மாமியார் கொடுமை செய்வதாக லோகேஷ் தான் அடிவாங்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். தனது மனைவி மற்றும் மாமியார் தினமும் இரவில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்குமாறு போலீசாரிடம் கெஞ்சி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்து காலம் எல்லாம் மாறி போச்சு...ஆண்களை சித்தரவதை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக சமூக தளங்களில் சமூகதளவாசிகள் பொங்கி உள்ளனர். ஆண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.