கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை


கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை
x

கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா நகருக்கு அருகே உள்ள தேவர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் இருந்தனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் பிரியங்காவுக்கு ஆசிஷ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரகசிய தொடர்பில் இருந்த அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

அதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். கடந்த ஆண்டில் ஒருநாள், தங்கள் ஊருக்கு அருகே உள்ள செங்கர் ஆற்றங்கரைக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அங்கு ஈவு இறக்கமின்றி 4 குழந்தைகளையும் அடுத்தடுத்து ஆற்றில் தூக்கி வீசினர். இதில் மாதவ் (வயது 6), ஆதித்யா(4), மங்கள் (2) ஆகிய 3 குழந்தைகள் பரிதாபமாக செத்தனர். மூத்த மகனான சோனு (9) அதிர்ஷ்டவசமாக கிராம மக்களால் காப்பாற்றப்பட்டான்.

இதுகுறித்து பிரியங்காவின் மைத்துனர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பிரியங்காவையும், அவரது காதலர் ஆசிஷையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அவுரையா அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குழந்தைகளை கொன்ற தாய் பிரிங்காவுக்கு தூக்கு தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆசிஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story