பெண் வக்கீலுடன் பலமுறை உல்லாசம்.. சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காவலர்


பெண் வக்கீலுடன் பலமுறை உல்லாசம்.. சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காவலர்
x

பெங்களூருவில் திருமண ஆசைகாட்டி பெண் வக்கீலை ஏமாற்றியதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசவேசுவரா நகர்,

பெங்களூரு நகரில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர் வக்கீல் ஆவார். இவருக்கும், மங்களூருவில் நக்சல் ஒழிப்பு படையில் காவலராக பணியாற்றும் சித்தேகவுடா (வயது 32) என்பவருக்கும் கடந்த ஆண்டு (2024) பழக்கம் ஏற்பட்டது. சித்தேகவுடாவின் சொந்த ஊர் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி ஆகும். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தனர். பின்னர் இளம்பெண்ணும், சித்தேகவுடாவும் காதலிக்க தொடங்கினார்கள்.

இளம்பெண்ணை பார்க்க மங்களூருவில் இருந்து அடிக்கடி சித்தேகவுடா பெங்களூருவுக்கு வந்துள்ளார். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, அவரை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று சித்தேகவுடா பல முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்ய சித்தேகவுடா மறுத்து விட்டதாக தெரிகிறது. அதாவது இளம்பெண் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்ய மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி கேட்டதற்கு இளம்பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு பசவேசுவராநகர் போலீஸ் நிலையத்தில் சித்தேகவுடா மீது இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதுபற்றி அறிந்ததும் பணிக்கு செல்லாமல் சித்தேகவுடா தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில், தலைமறைவாக இருந்த சித்தேகவுடாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பெண் வக்கீலுக்கு திருமண ஆசைகாட்டி கற்பழித்ததும், சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு சித்தேகவுடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story