பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது


பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
x

மருத்துவ மாணவிகள் ஆடை மாற்றுவதையும் ரகசியமாக வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒன்றில் வெங்கடசாயி என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆண் நர்சாக பணிக்கு சேர்ந்தார். இந்தநிலையில், ஆபரேஷன் தியேட்டரில் பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை அவர் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மாணவிகள் ஆடை மாற்றுவதையும் அவர் ரகசியமாக வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வெங்கடசாயியை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால் போலீசார் வருவதற்கு முன்பே வெங்கடசாயியின் செல்போனை பிடுங்கி அதில் இருந்த 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழித்து விட்டதாக பெண் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே குற்றச்சாட்டின் உண்மைதன்மையை கண்டறிய நீக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோக்களை மீட்க வெங்கடசாயியின் செல்போனை போலீசார் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

1 More update

Next Story