கேரளா: தாமரை சின்னத்தில் சோனியா காந்தி போட்டி


கேரளா: தாமரை சின்னத்தில் சோனியா காந்தி போட்டி
x

கேரளாவில் மூணாறில் வசிக்கும் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டர் தனது மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டு இருந்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மூணாறில் வசிக்கும் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டர் தனது மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டு இருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகள் தமிழிசை பாஜகவில் சங்கமித்தது போல, இவரும் தந்தை வழியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்து பயணிக்கிறார்.

இப்போது சோனியா காந்தி கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு பஞ்சாயத்து 16வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. எனவே சோனியா காந்தி தாமரை சின்னத்தில் போட்டியிடுவது சுவாரசியமான விஷயம் ஆகிவிட்டது.

1 More update

Next Story