பூனையுடன் விளையாடியபோது விபரீதம்.. நகம் கீறியதால் சிறுமி பலியான சோகம்


பூனையுடன் விளையாடியபோது விபரீதம்.. நகம் கீறியதால் சிறுமி பலியான சோகம்
x

சிறுமியை, பூனை தனது கால் நகத்தால் பிரண்டியதாக கூறப்படுகிறது. அதில் சிறுமி காயம் அடைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்தவர் அஷ்ரப். இவருடைய மகள் ஹன்னா (வயது 11). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த பூனை ஹன்னாவை கால் நகத்தால் பிரண்டியதாக கூறப்படுகிறது. இதில் நகம் கீறியதில் சிறுமி காயம் அடைந்தார். உடனே அவரை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டனர்.

இதனிடையே சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் அவரது கழுத்தில் வீக்கத்தைக் கவனித்து உடனடியாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, 2-வது தடுப்பூசி போட்ட பிறகு ஹன்னாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால், அந்த சிறுமியை பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக இறந்தார்.

1 More update

Next Story