விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்

இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் செயல்படுகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள், செவ்வாய் கோளுக்கு அருகில் வந்து சென்ற அபூர்வ வகை ‘இன்டர்ஸ்டெல்லர்’ வால்மீனை, அட்லஸ் என்ற 1.2 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறிந்து புகைப்படம் எடுத்தனர். இதனால் இதற்கு ‘வால்மீன் 3ஐ/அட்லஸ்’ என பெயரிட்டுள்ளனர். இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும்.
3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகள் மற்றும் சூரியனுக்கு அப்பால் உருவாகும் பொருள் பற்றிய அரிய தகவல்களை வழங்குவதால் விஞ்ஞானிகள் அதை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரோவுடன் இணைந்த விஞ்ஞானிகளால் 3ஐ-அட்லஸ் என்ற அரிய விண்மீன்களால், சூரிய மண்டலத்திற்கு அப்பால் தோன்றும் பொருள் பற்றிய நமது புரிதலை வளப்படுத்துகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






