இந்தியா - பாகிஸ்தான் ராணுவ பலம்: யார் பக்கம் வலிமை?


இந்தியா - பாகிஸ்தான் ராணுவ பலம்: யார் பக்கம் வலிமை?
x

காஷ்மீர் பஹால்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் உறவை முறித்தது. இந்தியா அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், வெகுண்டெழுந்த இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை ஒருபக்கம் நடந்தாலும் மற்றொரு பக்கம் போர் மூண்டால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் முப்படைகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த பதற்றத்துக்கு மத்தியில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால், படை பலம் யாரிடம் அதிகம் உள்ளது?. வலிமையான நாடு எது? என்பது குறித்த ஒரு ஒப்பீடு.

இந்தியா

பாகிஸ்தான்

உள்நாட்டு உற்பத்தி; 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்

374 பில்லியன் அமெரிக்க டாலர்

மக்கள்தொகை 146 கோடி

25 கோடி

பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு: 77 பில்லியன் அமெரிக்க டாலர்

7.6 பில்லியன் அமெரிக்க டாலர்

ராணுவ வீரர்கள் 21.97 லட்சம்

13.11 லட்சம்

துணை ராணுவ வீரர்கள் 25.27 லட்சம்

5 லட்சம்

கடற்படை வீரர்கள் 1.42 லட்சம்

1.24 லட்சம்

விமானப்படை வீரர்கள் 3.10 லட்சம்

78 ஆயிரம்

விமானங்கள் 2,229

1,399

போர் விமானங்கள் 513

328

ஹெலிகாப்டர்கள் 899

373

தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 80

57

சிறப்பு பணி விமானங்கள் 74

27

போர் கப்பல் 293

121

கடற்படை விமானம் 2

0

நீர்மூழ்கி கப்பல்கள் 18

8

தாக்குதல் கப்பல்கள் 13

0

ரோந்து கப்பல்கள் 135

69

பீரங்கிகள் 4,201

2,627

கவச வாகனங்கள் 1.48 லட்சம்

17 ஆயிரம்

ராணுவ பலம்: இந்தியா 4-வது இடம்12-வது இடம்
1 More update

Next Story