சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது காசியாபாத்தில் காகிதம் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்தனர்.
அதில் கோடின் என்ற இருமல் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரூ.57 கோடி மதிப்புள்ள சுமார் 37 லட்சம் மருந்து பாட்டில்கள் சட்டவிரோதமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 12 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






