இந்தி நடிகர் தர்மேந்திரா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இவர் 2004 முதல் 2009 வரை பாஜக எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.
டெல்லி,
பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா (வயது 89). இவர் இந்தி சினிமா துறையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2004 முதல் 2009 வரை பாஜக எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மேந்திரா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு. அவர் திரைத்துறையில் ஆளுமையின் சின்னமாகவும், அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்தையும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். தர்மேந்திரா அவரின் எளிமை , மனித நேயத்திற்கு புகழ்பெற்றவர். இந்த சோகமான சூழ்நிலையில் தர்மேந்திராவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
என பதிவிட்டுள்ளார்.






