அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் எழுச்சி - பிரதமர் மோடி


அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் எழுச்சி - பிரதமர் மோடி
x

இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அயோத்தி,

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்று உள்ளார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றி வைத்தார். 11 அடி உயரமும், 22அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும்வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு கொடி 191 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா முன்னிட்டு ஒட்டு மொத்த தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளது.உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம்.சுமார் 500 ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது. இன்று எல்லா இடமும் ராம மயமாக காட்சியளிக்கிறது. இந்தியாவின் கலாச்சார விழிப்புக்கு இன்றைய நாள் சாட்சியாக உள்ளது. பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வருகிறது.

அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி. வாய்மையே என்றும் வெல்லும் என்பதை ராமர் ஆலய கொடி காட்டுகிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் நாள். அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் போது, சப்த மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர். நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

1 More update

Next Story