முதல்-மந்திரி பதவிக்காக நான் அவசரப்படவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி


முதல்-மந்திரி பதவிக்காக நான் அவசரப்படவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி
x

முதல்-மந்திரி மாற்றம் விவகாரத்தில் கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும் என டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி மாற்றம் விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் வேண்டுமானால் ஆர்வமாக இருக்கலாம். நான் அவசரப்படவில்லை. கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். நான் டெல்லி செல்லலாம். அங்கு நிறைய பணிகள் உள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனால் கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

கடவுளின் கருணையால் மேகதாது திட்டத்தில் கர்நாடகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. எம்.பி.க்களுடன் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசிக்க உள்ளேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story