சமைக்க தெரியவில்லை என்று கூறி தாய் வீட்டில் விட்டுச் சென்ற கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
இளம்பெண், கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது நீ எனக்கு அவசியமில்லை என்று கூறி திட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்டமீதி கங்காரம் கிராமத்தை சேர்ந்த கஞ்சி மல்லம்மா - சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21 வயது). இவருக்கும், நல்லமோனி கூடத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சிரிஷாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும், தன்னைவிட குறைவாக படித்து உள்ளார் என்றும் கூறி சிவலிங்கம் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 25-ந்தேதி இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சிரிஷாவை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு சென்றுவிட்டார். நடந்த விஷயங்களை கேட்ட சிரிஷாவின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில், கணவரை சிரிஷா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீ எனக்கு அவசியமில்லை என்று சிவலிங்கம் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிரிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






