குடும்பத்தகராறில் ஆசிட் வீசி பெண் கொலை - கணவர் கைது


குடும்பத்தகராறில் ஆசிட் வீசி பெண் கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2025 9:56 PM IST (Updated: 21 Nov 2025 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிம்லா,

இமாசலபிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் சைன் மொஹல்லா பகுதியைச் சேர்ந்தவர் நந்த்லால். இவர் தனது மனைவி மம்தாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் திடீரென ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் மம்தா மீது கணவர் திராவகத்தை ஊற்றினார்.

அப்போது அலறித்துடித்த அவரை ஆத்திரம் தீராமல் மாடியிலிருந்து கீழே தள்ளினார். இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மம்தாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும், இதற்கு காரணமான கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story