தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை? உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு


தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை? உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 6 May 2025 1:13 PM IST (Updated: 6 May 2025 2:55 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய நாடுகளின் போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

நாளை நடைபெற உள்ள இந்த போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்பது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், தமிழகத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது. ஐதரபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ (நகர்புறம்), கொச்சின், திருவனந்தபுரம், பாண்டிசேரி உள்ளிட்ட இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது. சென்னயில் கல்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

1 More update

Next Story