கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
x

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வெளிநாடுகளில் நிதி திரட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டுவதற்காக ரூ.2 ஆயிரத்து 672 கோடிக்கான ‘மசாலா' கடன் பத்திரத்தை வெளியிட்டது.

இந்த நிதியில் ரூ.466.91 கோடி முறைகேடாக நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. எனவே இந்த நேரத்தில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது, பா.ஜனதாவின் அரசியல் சூழ்ச்சியாக கருதுகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டியது.

1 More update

Next Story