காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர் செய்த படுபாதக செயல்


காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர்  செய்த படுபாதக செயல்
x

இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார் நைஜீரிய வாலிபர்.

திருப்பதி,

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்தார். காதல் என்ற பெயரில் இளம் பெண்களை மயக்கினார். பின்னர் அவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது வழக்கம்.

இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார். திருமணம் செய்த இளம் பெண்களை போதை பொருள்விற்கும் ஏஜென்டாக மேலும் மாற்றினார். போதைக்கு அடிமையான இளம் பெண்களை கண்ட றிந்து அவர்களுக்கு இலவசமாகபோதைப்பொருட்களை வழங்குவார். அவர்களையும் போதைப்பொருள் இருப்ப வர்களாக மாற்றி விடுவார். ஐதராபாத், பெங்களூரு, கோவா என 3 மாதங்களுக்கு ஒரு முறை நகரங்களை மாற்றிக்கொண்டு வருவார். 5 வீடுகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தார். அடிக்கடி நகரங்களை மாற்றி வந்ததால் நைஜீரிய வழிமுறை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஐதராபாத், கொம்பலியை சேர்ந்த நர்ஸ் ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் நர்ஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது ஏராளமான போதை பொருள் சிக்கியது. போலீசார் நர்சை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் நைஜீரிய வாலிபரின் காதலில் விழுந்த நான் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரி வித்தார். மும்பையில் கஞ்சா விற்பதற்கு கடல் பச்சை என்றும் போதைப்பொருள் தேவையா என்பதற்கு 3 (???) கேள்விக்குறிகளும், போதைப் பொருள் வேண்டும் என்ப வர்களுக்கு ஸ்கோர் எனும் செய்தியை அனுப்பி போதை பொருள் விற்பனை செய்த தாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நர்ஸ் மற்றும் நைஜீரியா வாலிபரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள பெண்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story