நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 1.34 சதவீதம் சரிவு

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 1.34 சதவீதம் சரிந்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டில் கடந்த 10-ந்தேதி வரையான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட நிகர நேரடி வரி வசூல் ரூ.5.63 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்டதை விட (ரூ.5.70 லட்சம் கோடி) 1.34 சதவீதம் குறைவாகும்.
இந்த நேரடி வரி வசூலில் நிகர கார்பரேட் வரி ரூ.2 லட்சம் கோடி, கார்பரேட் அல்லாத வரி ரூ.3.45 லட்சம் கோடி, பங்கு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த ரூ.17,874 கோடியும் அடங்கும். நிகர வரி வசூல் சரிவுக்கு முக்கிய காரணம் நிகர ரீபண்ட் 38 சதவீதம் அதிகரித்தது ஆகும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் ரூ.1.02 லட்சம் கோடி திரும்பப்பெறப்பட்டு உள்ளது.
இதையும் சேர்த்த மொத்த நேரடி வரி வசூல் ரூ.6.65 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட (ரூ.6.44 லட்சம் கோடி) 3.17 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story