டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - 5 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் நிலையம் திறப்பு


டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - 5 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் நிலையம் திறப்பு
x

கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக டெல்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கீலா மெட்ரோ நிலையம் மூடப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக டெல்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கீலா மெட்ரோ நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வரை ரெயில் நிலையம் மூடப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 5 நாட்களுக்கு பிறகு, லால் கீலா மெட்ரோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, ரெயில் நிலையம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story