டெல்லியில் காற்று மாசுபாடு - சோனியா காந்தி கருத்து


டெல்லியில் காற்று மாசுபாடு - சோனியா காந்தி கருத்து
x
தினத்தந்தி 4 Dec 2025 1:42 PM IST (Updated: 4 Dec 2025 4:22 PM IST)
t-max-icont-min-icon

காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடித்து வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்த்ல் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள்., நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள், முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

காற்று மாசுபாடு பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு; இளம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள், என்னைப் போன்ற முதியவர்களுக்கும் இது கடினம் என்றார்.

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், நேற்று புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராகவும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story