கர்நாடகா முதல்-மந்திரி குறித்து காங்கிரஸ் தலைமை 28-ந்தேதி முடிவு


கர்நாடகா முதல்-மந்திரி குறித்து காங்கிரஸ் தலைமை 28-ந்தேதி முடிவு
x

இந்த பிரச்சினை குறித்து ராகுல்காந்தியை மல்லிகார் ஜுன கார்கே விரைவில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி. கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் உள்ளனர். ஒப்பந்தப்படி 2½ ஆண்டுகள் முடிந்த பிறகும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் ஆதரவு எம். எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். டி.கே. சிவக்குமாரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக இரு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தினார். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல்-மந்திரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 28 அல்லது 29 -ந்தேதி முடிவு எடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றம் டிசம்பர் 1-ந்தேதி கூடுகிறது. அதற்கு முன்பு காங்கிரஸ் இது குறித்து முடிவு செய்யும்.

இந்த பிரச்சினை குறித்து ராகுல்காந்தியை மல்லிகார் ஜுன கார்கே நாளை சந்திப்பார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி விவ காரம் குறித்து இறுதி செய்யப் படும். முதல்- மந்திரி பதவியில் சித்தரா மையா நீடிப்பரா? அல்லது டி.கே. சிவக்குமார் முதல்- மந்திரி ஆவாரா? என்பது அப்போது முடிவு எடுக்கப்படும்.

இதற்கிடையே டெல்லி சென்று வந்த ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. இக்பால் உசேன் கூறுகையில், டி. கே.சிவகுமார் இந்த வருடம் இறுதியில் முதல்-மந்திரியாக பதவியேற்பார். 200 சதவீதம் உறுதி என்றார்.

1 More update

Next Story