காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்


காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

காங்கிரஸ் மாவட்ட பட்டியலின பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அனில். இவர் காங்கிரஸ் மாவட்ட பட்டியலின பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அனில் நேற்று இரவு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது காரை 2 கார்களில் வந்த மர்ம கும்பல் இடைமறைத்தது. பின்னர், காரில் இருந்த அனிலை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே அனில் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அனிலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். அனில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த நிலையில் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? அல்லது அரசியல் ரீதியில் கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story