கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது

மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்தநிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை நாகேஷ்வர் பலாத்காரமும் செய்துள்ளார். மேலும் அதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி, வெளியே யாரிடமும் இதுபற்றி கூறவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கல்லூரி மாணவியை நாகேஷ்வர் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். 2 ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்ந்துள்ளது. நாகேஷ்வரின் தொல்லை தாங்க முடியாமல் அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி கேம்ப் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஷ்வரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






