பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை


பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

பள்ளியில் பயிலும் சகமாணவர்கள் மாணவியை கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம், மாஸ்டாகாட் பகுதியை சேர்ந்தவர் தீபக். தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஆரோகி (13 வயது) அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டாள். இந்த சம்பவத்தில் மாணவி ஆரோகி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினாள்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பள்ளியில் பயிலும் சகமாணவர்கள் மாணவி ஆரோகியை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி மாணவி ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் படிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் ஆசிரியர் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மாணவிக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story