வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்


வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்
x

கோப்புப்படம் 

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய வங்கிகள் '.bank.in' என்ற பிரத்யேக டொமைனுக்கு மாறியுள்ளன.

புதுடெல்லி,

சமீப காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கவும், ஆன்லைன் வங்கிச் சேவைகளில் வாடிக்கையாளர்களின் நிதித் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்களின் இணையதள முகவரியை '.bank.in' என்ற பிரத்யேக டொமைனுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் '.bank.in' என முடியும் புதிய டொமைனுக்கு மாறியுள்ளன. (எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி - https://sbi.bank.in)

ஏன் இந்த மாற்றம்..?

பாதுகாப்பு: '.bank.in' டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும். இது வாடிக்கையாளர்களை பிஷிங் (phising) மற்றும் போலி வலைதளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.

வங்கிகள் மீது நம்பிக்கையை உருவாக்கும்: இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தை எளிதாக அடையாளம் காண முடியும். உதாரணமாக - www.abc.com என்பதற்கு பதிலாக www.abc.bank.in என்பதைப் பார்க்கும்போது அது நம் வங்கிதான் என்ற பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும்.

இணைய மோசடிகளை தடுக்கும் முயற்சி: இதன் மூலம் போலியான வலைதளங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். இந்த டொமைன் கட்டுப்பாடு மூலம் மோசடி வலைதளங்களை தடுக்க முடியும்.

1 More update

Next Story