முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரை


முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி துவாரகா கோவிலுக்கு  பாதயாத்திரை
x
தினத்தந்தி 2 April 2025 3:44 AM IST (Updated: 2 April 2025 12:25 PM IST)
t-max-icont-min-icon

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காராருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஆனந்த அம்பானி வரும் 10 ஆம் தேதி 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக, அவர் ஒவ்வொரு இரவும் 10-12 கி.மீ. தூரம் நடந்து செல்ல உள்ளார். பலத்த பாதுகாப்புக்கு இடையே அவர் இந்த பாதயாத்திரயை தனது பணியாளர்களுடன் மேற்கொண்டுள்ளார்.


Next Story