பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போதை ஆசாமி


பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போதை ஆசாமி
x

தனது பைக்கை தராவிட்டால் போலீஸ் ஜீப்பை எடுத்துச் சென்றுவிடுவேன் என்று யுவராஜ் எச்சரித்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜை, கடந்த புதன்கிழமை இரவு போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த யுவராஜ், தனது பைக்கை திருப்பி தருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், விதிமுறைகள் காரணமாக போலீசார் மறுத்தனர். இதனால் சினம் கொண்ட அவர், “என் பைக்கை தராவிட்டால் உங்கள் போலீஸ் ஜீப்பை எடுத்துச் சென்றுவிடுவேன்” என்று எச்சரித்தார்.

அவர் மதுபோதையில் பேசுவதாக நினைத்து போலீசார், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சொல்லியதுபோலவே யுவராஜ், அங்கு நின்றிருந்த போலீஸ் ஜீப்பை ஸ்டார்ட் செய்து, நேராக தனது வீட்டிற்கே ஓட்டிச் சென்றார். வீட்டிற்கு வந்த பிறகு கடும் மதுபோதையில் பேச முடியாத நிலையில் தள்ளாடி விழுந்தார். இதனை கவனித்த அவரது அண்ணன், உடனடியாக போலீஸ் வாகனத்தை காவல் நிலையத்திற்கு திருப்பிக் கொண்டு சென்று ஒப்படைத்தார்.

1 More update

Next Story