அக்காளுக்கு உதவியாக வந்த கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர்; ‘போக்சோ’ சட்டத்தில் கைது


அக்காளுக்கு உதவியாக வந்த கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர்; ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x

மனைவி 2-வது குழந்தை பெற்றிருந்ததால் வாலிபருக்கு கொழுந்தியாளான சிறுமி மீது ஆசை துளிர்விட்டுள்ளது.

பெங்களூரு,

யாதகிரி மாவட்டம் கெம்பாவி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறை கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு உதவியாக அவரது 16 வயது தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். அவர், அக்காள் மற்றும் குழந்தைகளை பார்த்ததுடன், வீட்டு வேலைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி 2-வது குழந்தை பெற்றிருந்ததால் வாலிபருக்கு கொழுந்தியாளான சிறுமி மீது ஆசை துளிர்விட்டுள்ளது. தனது வீட்டில் தங்கியிருந்ததால், அவரிடம் வாலிபர் எல்லை மீறி நடந்து கொண்டார்.

இந்த நிலையில், அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறினால் உனது அக்காளையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக அவர் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாலிபர், சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமிைய பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அக்காள் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கெம்பாவி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story