நெடுஞ்சாலையில் தூய்மைப்பணியாளர்கள் மீது மோதிய லாரி - 7 பேர் பலி


நெடுஞ்சாலையில் தூய்மைப்பணியாளர்கள் மீது மோதிய லாரி - 7 பேர் பலி
x

படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சண்டிகர்,

டெல்லி , மும்பை இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அரியானா மாநிலம் வழியாக இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

இந்நிலையில், அரியானாவின் நு மாவட்டம் இப்ராகிம் பஸ் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தூய்மைப்பணியாளர்கள் 10க்கும் மேற்பட்ட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் தூய்மை பணியாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story