டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது

டெல்லியில் முண்ட்கா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முண்ட்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் இயங்கி வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் அங்கு டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி, அதிக விலைக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கியாஸ் நிரப்பும் எந்திரங்கள், சிலிண்டர் சீல்கள், 2 வாகனங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இது தொடர்பாக 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






