டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் பலி

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த10 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் 3 மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 3 பெண்கள் உட்பட 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story